பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் ஆயுததாரி! சுற்றிவளைத்த பொலிசார்!

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலரை ஆயுததாரி ஒருவர் பிணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இன்று புதன்கிழமை நண்பகல் இச்சம்பவம் Épinay-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.

rue du Général-Julien, வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து brigade de recherches et d’intervention காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அதே கட்டிடத்தில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், அங்கு வசிக்கும் பலரை வீடொன்றுக்குள் வைத்து பூட்டி வைத்து அவர்களை ஆயுத முனையில் மிரட்டியுள்ளார்.

பின்னர் அவருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நிகழ்த்தி அனைவரையும் விடுவித்துள்ளனர். ஆயுததாரியும் கைது செய்யப்பட்டார். அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி சம்பவம் முடிவுக்கு வந்ததாக அறிய முடிகிறது. குறித்த ஆயுததாரி மனநல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து தப்பி வந்துள்ளார் எனவும் அறிய முடிகிறது.

Back to top button