பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் மாற்றப்படவுள்ள அமைச்சர்கள்! வெளியான பெயர்கள்!

பிரதமர் Elisabeth Borne, தனது அமைச்சர்களில் மூவரை மாற்ற உள்ளதாக செய்திகள் உலாவி வருகிறது. நேற்று 3 ஆம் திகதி புதன்கிழமை கூட இருந்த அமைச்சரவைக் கூட்டம் காரணம் தெரிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் போது அதில் அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என அறிய முடிகிறது.

SÉBASTIEN LECORNU

ஆயுதப்படை அமைச்சராக (ministre des Armées,) கடமையாற்றும் இவர் இந்த பட்டியலில் முக்கியமானவர் எனவும், இவர் தனது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் அறிய முடிகிறது.

BRUNO LE MAIRE

தற்போதைய பொருளாதார அமைச்சராக (Le ministre de l’Économie) இவர் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவர் வேறு அமைச்சர் பதவிக்கு மாற்றப்படலாம் என அறிய முடிகிறது.

CHRISTOPHE BÉCHU

சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான அமைச்சர் ( ministre de la Transition écologique ) Christophe Béchu கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து அமைச்சராக கடமையாற்றி வருகிறார். இவரது பெயரும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Back to top button